அசத்தலான சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது ஒன்பிளஸ் 7டி..!

அசத்தலான சிறப்பம்சங்களுடன் வெளிவந்தது ஒன்பிளஸ் 7டி..!

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான ஒன் பிளஸ் 7டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முழுநேர விற்பனைக்கு வந்துள்ளது. 

இந்திய தொழில்நுட்ப சந்தையில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் நல்ல விற்பனையை கண்டு வருகின்றன. குறிப்பாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலே விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் நல்ல வரவேற்பை பயனாளர்கள் மத்தியில் பெற்றுள்ளது.  கடந்த ஆண்டு வெளிவந்த ஒன் பிளஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் நல்ல ஸ்பெசிஃபிகேஷன்களுடன் வெளிவந்ததால் அதற்கு அடுத்த வெர்ஷன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒன் பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான ஒன் பிளஸ் 7டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முழுநேர விற்பனைக்கு வந்துள்ளது. 

oneplus

இந்திய தொழில்நுட்ப சந்தையில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் நல்ல விற்பனையை கண்டு வருகின்றன. குறிப்பாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலே விற்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் நல்ல வரவேற்பை பயனாளர்கள் மத்தியில் பெற்றுள்ளது.  கடந்த ஆண்டு வெளிவந்த ஒன் பிளஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் நல்ல ஸ்பெசிஃபிகேஷன்களுடன் வெளிவந்ததால் அதற்கு அடுத்த வெர்ஷன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொழில்நுட்பக் கூட்டத்தில் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதம் ஒன் பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி குறிப்பிட்டார். 

நிறுவனம் குறிப்பிட்டதைப்போல, அமேசான் இயங்குதளத்தில் ஒன் பிளஸ் 7டி ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து முழுநேர விற்பனை துவங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

oneplus

இந்தியாவில் முதல்முறையாக ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸருடன் வெளிவரும் ஸ்மார்ட்போன் என்பதால் பயனாளர்களிடம் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை இங்கு காண்போம்.

1. 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ்
2. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அட்ரினோ 640 ஜிபியூ
3. 8 ஜிபி ரேம் + 128 ஜி.பி. / 256 ஜி.பி. – இரு வேரியண்ட்களில் கிடைக்கும்
4. 0ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0 
5. டூயல் சிம் ஸ்லாட்
6. 48 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.6, 1/2.25″ சோனி IMX586 சென்சார் + 16 எம்.பி. 117° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2 + 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.2
7. 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX471 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
8. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
9. யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
10. 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
11. ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்

-விக்கி