அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைய வாய்ப்பு…

 

அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைய வாய்ப்பு…

அக்டோபர் 1ம் தேதி முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசு பத்திரங்களின் ஆதாயத்தை கணக்கில் கொண்டு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக அரசு பத்திரங்கள் ஆதாயம் கடுமையாக குறைந்துள்ளது. அதனால் வரும் அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு

இதுதவிர, பொது வைப்பு நிதி (பி.பி.எப்.), தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எப்.சி.), கிஷான் விகாஸ் பத்திரம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் அஞ்சலக மாதந்திர வருவாய் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதத்தையும் மத்திய அரசு குறைக்கலாம் என தெரிகிறது.

கிஷான் விகாஸ் பத்திரம்

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருப்பததால்தான் வங்கிகளால் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை வேகமாக குறைக்க முடியவில்லை. சிறு சேமிப்புகளுக்கான வட்டி அரசு குறைத்தால் வங்கிகள் வேகமாக டெபாசிட் வட்டி குறைக்க  வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள்தான்