அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்த பூலான் தேவியின் சகோதரி

 

அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்த பூலான் தேவியின் சகோதரி

உத்தர பிரதேசத்தில் மறைந்த சம்பல் கொள்ளைக்காரி பூலான் தேவியின் சகோதரி ருக்மணி தேவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில ஆண்டுகள் உள்ளது. ஆனால் இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கி விட்டார்  சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ். இதற்காக முக்கிய பிரபலங்களை தன் கட்சிகளை இணைக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த கட்சியில் 2 பிரபலங்கள் இணைந்தனர்.

சமாஜ்வாடியில் இணைந்த ருக்மணி தேவி நிஷாத்

பூலான் தேவி சகோதரி ருக்மணி தேவி நிஷாத்தும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமாகந்த் யாதவும் நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தனர். ருக்மணி தேவி நிஷாத் இது குறித்து கூறுகையில், என் சொந்த வீட்டுக்கு வந்த போல் உணருகிறேன் என தெரிவித்தார். ராமாகந்த் யாதவும் இது வார்த்தையைதான் சொன்னார். அகிலேஷ் யாதவ் இது குறித்து கூறுகையில், மக்களின் ஆதரவுடன் கட்சி வலுவாகி விட்டது. அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சி பெறும் என கூறினார். 

பூலான் தேவி

பிரபல சம்பல் கொள்ளைக்காரியாகவும், பின்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்டவர் மறைந்த பூலான் தேவி.  அவர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துதான் தனது அரசியல் பயணத்தை தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினராக உயர்ந்தார். எதிர்பாராத விதமாக 2001ல் பூலான் தேவி படுகொலை செய்யப்பட்டார். பூலான் தேவிக்கு அரசியில் ஆதரவு அளித்த சமாஜ்வாடி கட்சி தற்போது அவரது சகோதரி ருக்மணி தேவிக்கும் ஆதரவு கரம் நீடித்துள்ளது.