அகர்வால் இரட்டை சதம்.. 502 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்.. தடுமாறும் தென்னாபிரிக்கா!!

 

அகர்வால் இரட்டை சதம்.. 502 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்.. தடுமாறும் தென்னாபிரிக்கா!!

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 502 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் 502 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

ind vs sa

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. இதில் முதல்முறையாக லிமிட்டட் ஓவர் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்கி வந்த ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இவருக்கு பக்கபலமாக மயங்க் அகர்வால் மறுமுனையில் இறங்கினார். 

இருவரும் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். முதல் நாள் முடிவில் 202 ரன்கள் எடுத்து இருக்கையில் மழையின் குறிப்பிட்டால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோஹித் 115* மற்றும் அகர்வால் 84* ரங்களுடன் களத்தில் இருந்தனர். 

rohit and mayank

இதனையடுத்து இன்று காலை துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா தனது அதிரடி மீண்டும் தொடர்ந்தார். 150 ரன்களை கடந்த இவர் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக 176 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் 23 பவுண்டரிகளும் 6 சிக்சர்கள் அடங்கும்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் பூர்த்தி செய்ததோடு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கி இரட்டை சதம் அடித்து அசத்தினார். 215 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த அகர்வால் 23 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களை அடித்திருந்தார். 

மற்ற வீரர்களான புஜாரா 6 ரன்களுக்கும், விராட் கோலி 20 ரன்களுக்கும், ரஹானே 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து முதல் இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சை துவங்கியது. 

தென்னாபிரிக்காவின் துவக்க வீரர்களை இந்திய சூழல் ஜோடி வீழ்த்தியது. அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா 39/3 என தடுமாறி வருகிறது.

-vicky