ஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்!

 

ஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்!

சிறுவனின் உணவுப்பழக்கம்பற்றி டாக்டர்கள் கேட்டதற்கு ‘எப்பவுமே அவன் உருளைக்கிழங்கு சிப்ஸும் ஃப்ரெஞ்ச் ஃப்ரையும் மட்டும்தான் டாக்டர் சாப்பிடுவான்’ என அப்பாவியாக சொல்லியிருக்கிறார்கள். பிரிஸ்டல் பல்கலைக்கழக மருத்துவர்கள் சிறுவனின் மருத்துவக் குறிப்புகளை பார்த்துவிட்டு, அவனின் கண்பார்வை பறிபோனதன் காரணமாக சுட்டிக்காட்டியது ஃப்ரெஞ்ச் ஃப்ரை மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸையும்தான்.

அமெரிக்கா, வாஷிங்க்டனைச் சேர்ந்த 14வயது சிறுவனை மருத்துவர்களிடம் அழைத்துப் போகிறார்கள் பெற்றோர். பிரச்னை என்னவென்றால், எப்போதுமே டயர்டாக ஃபீல் பண்ணுவதாக அச்சிறுவன் சொல்லியிருக்கிறான். சரியான உடல் எடையுடன் சராசரியான தோற்றத்துடன் இருந்தாலும், வைட்டமின் பி12 குறைபாட்டால் சற்றே இரத்தசோகையோடு காணப்பட்டிருக்கிறார். பையனின் நடவடிக்கைகள் மற்றும் வழக்கமான உணவு பற்றி டாக்டர் விசாரிக்கும்போதுதான் தெரியவருகிறது, பையன் மூவேளையும் உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃப்ரெஞ்ச் ஃப்ரை, பிரெட் மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ளவனாம். நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடவேண்டும் என்று அறிவுரைச் சொல்லி, ரத்தசோகைக்கு மருந்து எழுதி தந்திருக்கிறார்.

Extensive French fry caused blindness

சரியாக ஒருவருடம் கழித்து திரும்பவும் மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறார்கள் பெற்றோர். இப்போது நிலைமை சற்று கவலைக்குறியதாக இருக்கிறது. பையனுக்கு காதிலும் கண்ணிலும் குறைபாடு, அதாவது கேட்கும்-பார்க்கும் சக்தி சற்று குறைந்திருக்கிறது. திரும்பவும் எல்லா டெஸ்டும் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். ஒன்றும் பெரிதாக அறிகுறி இல்லை. இரண்டு வருடங்கள் கழித்து அதாவது 17 வயதில் அச்சிறுவனை முற்றிலும் பார்வை பறிபோன நிலையில் அழைத்து வந்திருக்கிறார்கள். இப்போதும் சிறுவனின் உணவுப்பழக்கம்பற்றி டாக்டர்கள் கேட்டதற்கு ‘எப்பவுமே அவன் உருளைக்கிழங்கு சிப்ஸும் ஃப்ரெஞ்ச் ஃப்ரையும் மட்டும்தான் டாக்டர் சாப்பிடுவான்’ என அப்பாவியாக சொல்லியிருக்கிறார்கள். பிரிஸ்டல் பல்கலைக்கழக மருத்துவர்கள் சிறுவனின் மருத்துவக் குறிப்புகளை பார்த்துவிட்டு, அவனின் கண்பார்வை பறிபோனதன் காரணமாக சுட்டிக்காட்டியது ஃப்ரெஞ்ச் ஃப்ரை மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸையும்தான்.