ஃபேஸ்புக் போன்று ஆன்லைனில் இருக்கும் டிவிட்டர் பயனர்கள் பற்றி அறிய புதிய வசதி விரைவில் அறிமுகம்

 

ஃபேஸ்புக் போன்று ஆன்லைனில் இருக்கும் டிவிட்டர் பயனர்கள் பற்றி அறிய புதிய வசதி விரைவில் அறிமுகம்

டெல்லி: டிவிட்டரில் ஆன்லைனில் இருக்கும் பயனர்கள் குறித்து அறிய புதிய வசதி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

ஃபேஸ்புக் இணையதளத்தில் பயனர்கள் அனைவரும் தங்கள் நண்பர்களுடன் சாட் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அதன் மூலம் நண்பர்கள் யாரெல்லாம் ஆன்லைனில் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதேபோன்ற வசதி டிவிட்டர் தளத்திலும் இருக்கிறது.

விரைவில் இந்த தளத்திலும் ஆன்லைனில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த வசதி மூலம் ஆன்லைனில் இருப்பவர் உடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும். உரையாடல்களை தொடர்ச்சியாக கவனிக்க முடியும்.