ஃபுட் கோர்ட்: வீட்டிலேயே எளிதாக செய்யலாம் சுவையான பனீர் பிரட் ரோஸ்ட்!

ஃபுட் கோர்ட்:  வீட்டிலேயே எளிதாக செய்யலாம் சுவையான பனீர் பிரட் ரோஸ்ட்!

புரதச்சத்து நம் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் இன்றியமையாதது. இறைச்சிகள் மற்றும் பருப்புகளைப் போலவே பனீரிலிருந்தும் புரதச்சத்தானது அதிகம் கிடைக்கிறது. அதிலும் சாதாரண பாலில் உள்ளதை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. அதனால் நீரிழிவு உள்ளவர்களும்கூட பனீரை தைரியமாகச் சாப்பிடலாம். அப்படி எல்லோருக்கும் ஏற்ற உணவான பனீரில் பனீர் பிரட் ரோஸ்ட் எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்

  • பனீர் – அரை கப் (துருவியது)
  • சீரகம் தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவைக்கேற்ப
  • கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • பிரட் துண்டு – நான்கு (ஓரம் நறுக்கியது)
  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
  • நெய் – தேவையான அளவு

paneer

செய்முறை

  • கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பனீர் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள்.  பின், சீரக தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கிளறி பின்பு கொத்தமல்லி தூவி நான்கு நிமிடம் கழித்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிரட் துண்டுகளை ரொட்டி கட்டையால் திரட்டிக் கொள்ளவும். பிறகு, ஒரு பிரட் துண்டின் மேல் பனீர் கலவையை சிறிதளவு வைத்துப் பரப்பி அதன் மேல் இன்னொரு பிரட் துண்டு வைத்து தோசை கல்லில் போட்டு நெய் ஊற்றி ரோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான பனீர் பிரட் ரோஸ்ட் தயார். இதனுடன் டொமெட்டோ சாஸ் அல்லது ஏதேனும் சட்னி வைத்துப் பரிமாறலாம்.