ஃபுட் கோர்ட்: மணமணக்கும் மதுரை மட்டன் வறுவல்!

ஃபுட் கோர்ட்: மணமணக்கும் மதுரை மட்டன் வறுவல்!

அசைவ உணவுகளிலேயே மட்டன் தான் உடலுக்குக் குளிர்ச்சியை தருவது. அதிலும் மட்டனை எந்த மாதிரியான வகையில் சமைத்து சாப்பிட்டாலும் அதன் சுவையே அருமையாக இருக்கும். இத்தகைய சுவையான மட்டனில் வறுவல் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்

மட்டன் –  1/2 கி 

வெங்காயம் – 2  (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

தனியாதூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் – 100 மிலி

சோம்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 4

இஞ்சி – சிறு துண்டு

கொத்தமல்லி இலை – 1/2 கப்

புதினா – 1/4 கப்

தேங்காய் விழுது –1/4 கப்

கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

மட்டனைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்பு மட்டன், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதில் வேக வைத்த மட்டனைச் சேர்த்து, நீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

இத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் உப்பைச் சரிபார்த்து, கரம் கரம் மசாலா தூளை துவி நன்கு கிளறி இறக்கினால் சுவையான மதுரை மட்டன் வறுவல்  ரெடி.