ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துபவர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி 

 

ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துபவர்களுக்கு ரூ. 100 தள்ளுபடி 

சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் பயன்படுத்துவோருக்கு பிப்.15 முதல் 29ஆம் தேதி வரை ரூ.100 கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் பயன்படுத்துவோருக்கு பிப்.15 முதல் 29ஆம் தேதி வரை ரூ.100 கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

சுங்கச்சாவடிகளில் தானியங்கி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பாஸ்ட் டேக் முறை கடந்த டிசம்பர் மாதம் 15 அம் தேதி முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை செலுத்த முடியும். இதனால் வாகனங்கள் நிற்கும் நேரம் குறையும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி இனி சுங்கக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழியும், மற்ற அனைத்து வழிகளும் பாஸ்ட் டேக் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

fasttag

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சோதனை அடிப்படையில் பாஸ்ட் டேக் டிஜிட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த பாஸ்ட் டேக் வசதியானது RFID என்ற தொழில்நுட்பத்தில் மூலம் இயங்குகிறது. சுங்கச்சாவடிக்கு அருகே 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும் போது ரேடியோ அதிர்வு எண் தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் காரில் ஒட்டியுள்ள பாஸ்ட் டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து விடும். ஆனால் பலர் பாஸ்ட் டேக் மின்னணு அட்டைகளை பெறாததால் பாஸ்ட் டேக் முறையை பயன்படுத்தவில்லை. 

இந்நிலையில் பாஸ்ட் டேக் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் பயன்படுத்துவோருக்கு பிப்.15 முதல் 29ஆம் தேதி வரை ரூ.100 கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.