ஃபார்முக்கு வந்த திமுக…. யாருக்கு என்ன பொறுப்பு!!

 

ஃபார்முக்கு வந்த திமுக…. யாருக்கு என்ன பொறுப்பு!!

கூட்டத்தில் மக்களே எஜமானர்கள்; மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.பி.க்களின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திமுக நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் கூட்டத்தில் மக்களே எஜமானர்கள்; மக்களே மகேசர்கள் என்பதை மறவாமல் நாள்தோறும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தலைவராக டி. ஆர். பாலுவும், துணைத்தலைவராக கனிமொழியும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார். மேலும் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும்  தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளராக எஸ். எஸ். பழனிமாணிக்கம்
 நியமிக்கப்பட்டார்.