யார் என்ன சொன்னாலும் என் ஆதரவு இவங்களுக்கு தான்: அபிராமியின் பேச்சால் கடுப்பான முகின் ஆர்மியினர்!

 

யார் என்ன சொன்னாலும் என் ஆதரவு இவங்களுக்கு தான்: அபிராமியின் பேச்சால் கடுப்பான முகின் ஆர்மியினர்!

பிக் பாஸ் 3 போட்டியில் என் ஆதரவு இவருக்குத் தான் என்று அபிராமி தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் 3 போட்டியில் என் ஆதரவு இவருக்குத் தான் என்று அபிராமி தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் 3யில் பெரிதாகப் பேசப்பட்ட காதல் ஜோடிகளுக்குள் முக்கியமானவர்கள் முகின் – அபிராமி. முதலில் முகனை நண்பனாகப் பார்த்து வந்த அபிராமி நாட்கள் செல்லச்செல்ல அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் தனக்கு வெளியே காதலி இருப்பதால் முகின் அவர் காதலை மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் முகனை காதலித்து வந்ததால் வீட்டிற்குள் பூகம்பம் வெடித்து பின்பு  நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  வெளியே வந்த பிறகும் முகனை மறக்காமல் அவர் குறித்து ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு வருகிறார்.குறிப்பாக ப்ரீஸ் டாஸ்கிற்காக மலேசியாவிலிருந்து சென்னை வந்த முகின்  அம்மா மற்றும் தங்கையை நேரில் சந்தித்தார். இதனால் அபிராமியை பலரும் கண்டு வியந்தனர்.

mugen

இந்நிலையில் அபிராமி லாஸ்லியா  குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘யார் என்ன சொன்னாலும் நான் என் தங்கைக்கு ஆதரவாக இருப்பேன். அவள் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியானவள். அவளுடன் நான் ஒரே வீட்டிலிருந்துள்ளேன். நான் யாருக்கும் எதிரானவள் அல்ல. ஆனால்  என் ஆதரவு லாஸ்லியாவுக்கு தான். நல்ல உள்ளம் கொண்ட என் பூனை குட்டி’ என்றார். 

abi

இதை கண்ட லாஸ்லியா ஆர்மியினர் அபிராமிக்கு தங்கள் நன்றியை சொல்லும் வரும் அதே வேளையில் முகின்  ஆதரவாளர்களோ, இவ்வளவு நாள் முகினுக்கு ஆதரவாக இருப்பது போல இருந்துவிட்டு தற்போது லாஸ்லியா வெற்றி பெற வேண்டும் என்று கூறுவது நியாயமல்ல என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.