ஜூம் செயலிக்கு தடைவிதிக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

 

ஜூம் செயலிக்கு தடைவிதிக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தின. அதேபோல் வீட்டிலிருந்து செய்யும் வேலையை கண்காணிக்கவும், அலுவல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அனைத்து நிறுவனங்களும் கையெலுத்த ஒரு செயலி ஜூம். ஆனால் பாதுகாப்பு பாதிப்புகள் தொடர்பாக கூகுள் நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களின் கணினிகளிலிருந்தும் ஜூம் பயன்பாட்டை தடை செய்தது.

மேலும் ஹேக்கர்கள் திரைகளில் ஆபாச படங்களை வெளியிட்டதை அடுத்து சிங்கப்பூரும் ஜூம் ஆப் பயன்படுத்த தடை விதித்தது. இதேபோல் ஜூம் ஆப் பயன்பாட்டுக்கு ஜெர்மனி, சிங்கப்பூர் மற்றும் தைவானும் தடை விதித்தன. இதனிடையே ஜூம் வீடியோ கான்ஃபரன்ஸ் ஆப் பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஜூம் செயலிக்கு தடைவிதிக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

தனிநபர்களின் பயன்பாட்டிற்கு கூட ஜூம் ஆப் ஒரு பாதுகாப்பான தளம் அல்ல எனக்கூறிய உள்துறை அமைச்சகம் தற்போது பாதுகாப்பில்லாத ஜூம் செயலிக்கு தடை விதிக்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.