கொரோனா பாதிப்பில் தொடர்ந்து ராயபுரம் முதலிடம்.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி விவரம்!

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க இடப் பாற்றாக்குறை இருப்பதால் நேரு உள் விளையாட்டு அரங்கம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டு வருகிறது. அதே போல நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டத்தின் படி, சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மக்களை காக்க சென்னை மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகிறது. இதனிடையே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், இன்று சென்னையில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 2145 பேரும் , தண்டையார்பேட்டையில் 1160 பேரும் , திரு.வி.க நகரில் 1285 பேரும் , அண்ணா நகரில் 975 பேரும் , தேனாம்பேட்டையில் 1262 பேரும் , கோடம்பாக்கத்தில் 1525 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 11,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

நான் அதிருப்தியிலும் இல்லை; பிரதமரையும் தனியாக சந்திக்கவில்லை- திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து ஏராளமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு செல்லவிருப்பதாகவும், திமுக தலைமையை சிலர் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் கசிந்தது. மேலும் தலைவர்...

65 ஆண்டு கால வரலாற்றில் பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டியது!

1956ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட பவானிசாகர் அணை, கடந்த 65 ஆண்டு கால வரலாற்றில் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. 2018, 2019 மற்றும் 2020 என தொடர்ந்து 3 ஆண்டுகள்...

போதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த மனைவி!

குடிபோதையில் தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிகழ்ந்துள்ளது. பெரியேரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் போதைக்கு அடிமையான நிலையில் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில்...

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கேரளாவின் இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, காசர்கோடு கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில்...