லடாக் விவகாரம்: ஜொமேட்டோ ஊழியர்கள் தங்கள் கம்பெனி டி-ஷர்ட்டை எரித்து போராட்டம்

 

லடாக் விவகாரம்: ஜொமேட்டோ ஊழியர்கள் தங்கள் கம்பெனி டி-ஷர்ட்டை எரித்து போராட்டம்

கொல்கத்தா: லடாக் விவகாரத்தால் கொதிப்படைந்த ஜொமேட்டோ ஊழியர்கள் தங்கள் கம்பெனி டி-ஷர்ட்டை எரித்து போராட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் லடாக்கில் 20 இந்திய இராணுவ வீரர்களை சீன இராணுவம் கொன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீன இராணுவத்தின் செயல் இந்திய மக்களிடையே கொதிப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் நாட்டில் ஆங்காங்கே மக்கள் போராட்டம் செய்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், லடாக் விவகாரத்தால் கொதிப்படைந்த ஜொமேட்டோ ஊழியர்கள் கொல்கத்தாவின் பெஹலா பகுதியில் தங்கள் கம்பெனி டி-ஷர்ட்டை எரித்து போராட்டம் நடத்தினர்.

லடாக் விவகாரம்: ஜொமேட்டோ ஊழியர்கள் தங்கள் கம்பெனி டி-ஷர்ட்டை எரித்து போராட்டம்

கடந்த 2018-ஆம் ஆண்டு சீனாவின் அலிபாபா நிறுவனத்துக்கு சொந்தமான ஆன்ட் பைனான்சியல் நிறுவனம் 210 மில்லியன் டாலர் நிதியை ஜொமேட்டோ நிறுவனத்தில் முதலீடு செய்தது. இதன் மூலம் ஜொமேட்டோ நிறுவனத்தின் 14.7 சதவீத உரிமையை அந்நிறுவனம் கைப்பற்றியது. தற்போது கூடுதலாக 150 மில்லியன் டாலர் நிதியை ஜொமேட்டோ நிறுவனத்தில் ஆன்ட் பைனான்சியல் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

“சீன நிறுவனங்கள் இங்கிருந்து லாபம் ஈட்டுகின்றன. ஆனால் நம் நாட்டின் இராணுவத்தைத் தாக்குகின்றன. அவர்கள் இந்திய எல்லையை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதை அனுமதிக்க முடியாது” என்று கொல்கத்தாவில் போராட்டம் செய்த ஜொமேட்டோ ஊழியர்கள் தெரிவித்தனர்.