வருவாய் 3 மடங்கு அதிகரித்தும் லாபம் இல்லை.. ரூ.356 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸோமாடோ

வருவாய் 3 மடங்கு அதிகரித்தும் லாபம் இல்லை.. ரூ.356 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸோமாடோ

ஸோமாடோ நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ரூ.356 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸோமாடோ நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஸோமாடோ நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ரூ.356 கோடியை நிகர இழப்பாக கண்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்நிறுவனத்துக்கு 2020 ஜூன் காலாண்டில் ரூ.99.8 கோடி மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

வருவாய் 3 மடங்கு அதிகரித்தும் லாபம் இல்லை.. ரூ.356 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸோமாடோ
ஸோமாடோ

2021 ஜூன் காலாண்டில் ஸோமாடோ நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.916 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் மூன்று மடங்குக்கு மேல் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் ஸோமாடோ நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.283.5 கோடி ஈட்டியிருந்தது. ஸோமாடோ நிறுவனம் தனது நிதி நிலை முடிவுகள் குறித்து கூறுகையில், உணவு விநியோக வணிகத்தின் வளர்ச்சிதான் வருவாய் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். கடந்த ஏப்ரலில் கடுமையான கோவிட் அலை இருந்தபோதிலும் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வந்தது என்று தெரிவித்தது.

வருவாய் 3 மடங்கு அதிகரித்தும் லாபம் இல்லை.. ரூ.356 கோடி நஷ்டத்தை சந்தித்த ஸோமாடோ
ஸோமாடோ

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஸோமாடோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2 சதவீதம் குறைந்து ரூ.134.80ஆக இருந்தது.