darbar
  • January
    22
    Wednesday

Main Area

Main



டெல்லி அணி வீரருக்கு ‘அ..ஆ..இ..ஈ’ சொல்லி கொடுத்த தோனி மகள்: வைரல் வீடியோ!

தோனியின் மகள்
தோனியின் மகள்

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட்க்கு தோனியின் மகள் தமிழ் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது

ziva

ஐபிஎல் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. விசாகப்பட்டினத்தில்  நேற்று நடந்த இந்த போட்டியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.இதனையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் சென்னை மும்பையுடன் நாளை மோதவுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on

இந்த போட்டியைக் காண வழக்கம்போல் தோனியின்  மனைவியும் மகளும் வந்திருந்தனர். தோனியின் மகள் ஸிவா போட்டியை கண்டுகளித்து உற்சாகமாகக் கைதட்டி மகிழ்ந்தார். இதனிடையே, டெல்லி அணி வீரரான ரிஷப் பண்ட்க்கு தோனியின் மகள் தமிழ் கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், தோனியின் மகள் ஸிவா  அழகான கொஞ்சும் மழலை மொழியில்  அ..ஆ.. இ..ஈ  என ரிஷப் பண்ட்க்கு சொல்லிக் கொடுக்கிறார். அவரும் அதனை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவானது  தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக ஐபிஎல் தொடக்கத்தில் இருந்தே தோனியும் ரிஷப் பண்ட்டும் முட்டி கொண்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் போட்டியின் முடிவில்  மைதானத்தில் தோனியும், ரிஷப் பண்ட்க்கும் நீண்ட பேசிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.