சர்ச்சைக்குள்ளான காட்மேன் தொடரை இப்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை- ஜி5 நிறுவனம் அறிவிப்பு

 

சர்ச்சைக்குள்ளான காட்மேன் தொடரை இப்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை- ஜி5 நிறுவனம் அறிவிப்பு

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ ரகுபதி தயாரிப்பில் உருவாக்கியுள்ளது வெப்சீரிஸ் “காட்மேன்”. இதில் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சீரீஸ் வரும் 12 ஆம் தேதி இணையதளத்தில் வெளியாக உள்ளது. இதனிடையே காட்மேனின் டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில், திரைப்படத்தில் பிராமணர்களை பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் அவதூறான கருத்துக்களும் இழிவுப்படுத்தும் காட்சிகள் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சீரியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

டிரெய்லர் வெளியாகிய உடனே இது பல விமர்சனங்களை பெற்ற நிலையில், அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் உள்ள பிராமணர் சங்கத்தினர் புகார் அளித்தனர். அதுமட்டுமில்லாமல், பல காவல்நிலையங்களில் காட்மேன் தொடர்பாக புகார் எழுந்தது. இந்நிலையில், காட்மேன் வெப்சீரஸின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாளை மறுநாள் போலீசில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான காட்மேன் தொடரை இப்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை- ஜி5 நிறுவனம் அறிவிப்பு

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருந்த ஜி5 நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், காட்மேன் தொடரை இப்போதைக்கு வெளியிட திட்டம் இல்லை என அறிவித்துள்ளது. மேலும் ZEE5 நிறுவனம், தயாரிப்பாளர்கள், நிகழ்ச்சி, எந்தவொரு சமூகத்தையும், மத அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்லது உணர்வுகளை புண்படுத்தும் நோக்கமில்லை என தெரிவித்துள்ளது.