• February
    25
    Tuesday

Main Area

Main



இந்தியாவில் ஜெப்-ஜக் 9000 ப்ரோ சவுண்டுபார் அறிமுகம் - விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!

zebronics
zebronics

மும்பை: இந்தியாவில் ஜெப்-ஜக் 9000 ப்ரோ சவுண்டுபார் என்ற ஸ்பீக்கர்களை பிரபல ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆடியோ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜெப்ரானிக்ஸ் முன்னதாக ஜெப்-ஜக் பார் 4000, ஜெப்-ஜக் பார் 5000 ப்ரோ, ஜெப்-ஜக் பார் 6000 DWS ப்ரோ ஆகிய சவுண்டுபார் ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிய ஜெப்-ஜக் 9000 ப்ரோ சவுண்டுபாரை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும். முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் இந்த சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இந்த சவுண்ட்பாரில் டால்பி டிஜிட்டல் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது. சுவற்றில் மாட்டுவதற்கான கருவிகள் இந்த சாதனத்துடன் அளிக்கப்படுகிறது. மேலும் எச்.டி.எம்.ஐ, யு.எஸ்.பி, ப்ளூடூத், ஆக்ஸ் போன்ற உள்ளீட்டு வசதிகளும் எல்.இ.டி டிஸ்பிளேவும் இந்த சவுண்ட்பாரில் இடம்பெற்றுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.