• July
    23
    Tuesday

Main Area

Main



யுவராஜ் சிங் ரசிகர்களுக்கான குட் நியூஸ் இதோ!

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
Loading...

கனடா: கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடரில்  யுவராஜ் சிங்  விளையாடவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  இந்திய கிரிக்கெட் வீரர்  யுவராஜ் சிங்  அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தைக் கண்டு கிரிக்கெட் ரசிர்கர்கள் மட்டுமில்லாது எதிரணி வீரர்களும் பிரமித்துப் போயினர். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அதகளப்படுத்தியவர் யுவராஜ்.

yuvi

இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் அவர் இந்திய அணியிலிருந்து  ஓரங்கட்டப்பட்டார். இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவருக்கு அங்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில்   விளையாட அனுமதி வழங்குமாறு யுவராஜ் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதினார். ஆனால் பிசிசிஐ தரப்பிலிருந்து இன்னும் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. 


இந்நிலையில் கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடரில்  டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இந்த தொடர் அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கனடாவை சேர்ந்த வீரர்கள் தலா நான்கு பேர் ஒவ்வொரு அணியிலும் இடம்பெறுவார்கள்.  இதை குளோபல் டி20 கனடா டிவிட்டரில் அறிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.