என் ரசிகர்களும் பாராட்ட வேண்டியது இவரைத்தான்! யுவராஜ் சிங் சொல்வது யாரைத் தெரியுமா?

இங்கிலாந்து நாட்டின் வேகபந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட் என்றாலே இந்திய ரசிகர்களின் நினைவுக்கு வரும் ஆறு  பந்துகள் என்ன தெரியுமா…

2007 ஆம் ஆண்டில் நடந்த உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பிராட் வீசிய ஓவரில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசியதுதான். பிராட் இப்போதும் தீவிரமாக பந்து வீசி வருகிறார். சமீபமாக, 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்து சாதித்தார்.

பிராட்டின் இந்தச் சாதனைக்கு பல்வேறு நாட்டு வீரர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்திய வீரர் யுவராஜ் சிங், பிராட் பற்றி சிலாகித்தும் வாழ்த்தியும் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ‘ஒவ்வொரு முறை பிராட் பற்றி ஏதாவது எழுதினாலே நான் அவர் ஓவரில் 6 சிக்சர்களை அடித்ததையே பேசுகின்றனர்.

என் ரசிகர்கள் பிராடை பாராட்ட வேண்டும், அவர் ஒரு சாம்பியன் பவுலர். டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்பது சாதாரணமல்ல.

இது அவரது மன உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்குக் கிடைத்த பரிசு. பிராட் நீங்கள் ஒரு சாம்பியன், உங்கள் சாதனை தொடர வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...