கொங்கு பேரவை யுவராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

 

கொங்கு பேரவை யுவராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கொங்கு பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஈமு கோழி மோசடி வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கொங்கு பேரவை யுவராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சேலம் மாவட்டம் சங்ககிரி சேர்ந்தவர் யுவராஜ். கொங்கு பேரவை அமைப்பின் தலைவரான இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுதி ஈமு பார்ம் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இங்கு முதலீடு செய்தவர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி வந்ததை அடுத்து ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். இதில் 150 பேரிடம் 2 கோடி 70 லட்சம் மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக யுவராஜ் மற்றும் தமிழ் நேசன், வாசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை டான்பிட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி ரவி இந்த தீர்ப்பினை வழங்கினார்.

கொங்கு பேரவை யுவராஜ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறை தண்டனை பெற்று இருக்கும் யுவராஜ், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது . கோகுல்ராஜ் கொலை வழக்கில் பரபரப்பாக தேடப்பட்டு வந்தவர் பின்னர் சரணடைந்தார்.