15 கோடி ஆந்திர மக்களின் கனவு.. நாடாளுமன்றத்தில் சிலை வையுங்க… ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

ஆந்திர மாநிலம் பண்டுரங்கி கிராமத்தில் பிறந்தவர் அல்லுரி சீதாராம ராஜூ. அவர் தனது 18 வயதிலேயே துறவு மேற்கொண்டு பல இடங்களுக்கு யாத்திரை சென்றார். ஒரு முறை இமயமலைக்கு சென்றபோது, புரட்சி வீரர் பிருத்வி சிங் ஆசாத்தை சந்தித்த போது, ஆங்கில படைக்கு எதிராக செயல்பட்ட வரும் புரட்சி படை பற்றி தெரிந்து கொண்டார். ஆங்கில ஆட்சியில் வதைபடும் மக்களின் துயரம் இவரை கொதிக்க வைத்தது. காடு, மலைகளில் ஒளிந்தவாறே கொரில்லா போர் முறை மூலம் ஆங்கில படைகளை விரட்டி அடித்தார். இறுதியில் 1942ல் ஆங்கிலேய அரசு இவரை சுட்டுக்கொன்றது. ஆந்திர மக்கள் இவரை மலை வீரர் போற்றுகின்றனர்.

 ரகு ராமகிருஷ்ணா ராஜூ

சுதந்திர போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜூவின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவக்கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. ரகு ராமகிருஷ்ணா ராஜூ கடிதம் எழுதியுள்ளார். ரகு ராமகிருஷ்ணா ராஜூ அந்த கடிதத்தில், சுதந்திர போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜூவின் உருவ வெண்கல சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள 15 கோடிக்கும் அதிகமான ஆந்திர மக்களின் கனவை (நாடாளுமன்றத்தில் சிலை நிறுவுதல்) பரிசீலனை செய்யுமாறு உங்களிடம் கோரிக்கை விடுக்கிறேன். சிலை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

மக்களவை சபாநாயகர்

நாடாளுமன்ற மக்களவை சில கமிட்டியின் தரநிலைகள் பரிந்துரைகளுக்கு ஏற்பட மாடல் தயாராக உள்ளது என அதில் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று சுதந்திர போராட்டர வீரர் அல்லுரி சீதாராம ராஜூவின் 122வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் செலவுகளை குறைக்கும் நோக்கில் புதிய நாடாளுமன்றம வளாகம் கட்டுவதை மத்திய அரசு ஒத்திவைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. சிலை நிறுவ அனுமதி கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

இன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

மும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....