ஆபாசப் பேட்டி – youtube சேனல் நபர்கள் கைது – வரம்பு மீறலா… கருத்து சுதந்திர பறிப்பா?

 

ஆபாசப் பேட்டி – youtube சேனல் நபர்கள் கைது – வரம்பு மீறலா… கருத்து சுதந்திர பறிப்பா?

காட்சி ஊடகம் என்பது ஒரு காலத்தில் திரைப்படம், தொலைக்காட்சி என்று மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக youtube சேனல்கள் அதிகரித்து விட்டன. ஒரு மொபைல் போன் இருந்தால் போதும் ஒரு youtube சேனல் தொடங்கி விடலாம்.

ஆனால், youtube சேனலில் வியூஸை அதிகரிக்க பல்வேறு உத்திகளை பலரும் பின்பற்றுகின்றனர். பலர் பரபரப்புக்காக செக்ஸ் தொடர்பான கேள்விகளை இளைஞர்களிடம் கேட்டு அதற்கான பதிலைப் பதிவிடுவது அதிகரித்து வருகிறது. அது ஒரு விழிப்புணர்வு எனும் அளவில் ஓர் எல்லைக்குள் இருந்தால் பெரிய சிக்கல் இல்லை. அது அதன் லிமிட்டைக் கடக்கையில் சிக்கல்கள் எழவே ஆரம்பிக்கின்றன.

ஆபாசப் பேட்டி – youtube சேனல் நபர்கள் கைது – வரம்பு மீறலா… கருத்து சுதந்திர பறிப்பா?

Chennai talks எனும்youtube சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் அசன் பாதுஷா ஒரு பெண்ணிடம் எடுத்த பேட்டி இப்போது பெரும் பிரச்சனையாகி விட்டது. அந்தப் பெண் கூறிய கருத்துகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றன என்று ஒரு பெண் புகார் அளித்திருக்கிறார். Chennai Talks என்ற யூடியூப் சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர் அசன் பாதுஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு, உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது சம்பவத்தை நாம் எப்படி பார்ப்பது? கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவா… youtube சேனல்கள் எல்லை மீறுவதாக என்றா?

கருத்து சுதந்திரம் என்பது அரசு மற்றும் சமூகம் ஒரு கருத்தை வெளிப்படையாகப் பேச விடாமல் செய்திருக்கும் பட்சத்தில் அதைத் துணிச்சலாகப் பேசுவது. செக்ஸ் பற்றியும் நம் சமூகம் வெளிப்படையாகப் பேசுவதற்கு அனுமதிப்பது இல்லை. எனவே, அது குறித்த உரையாடல் மேற்கொள்வது சரியானதுதான். ஆனால், இந்த நிகழ்ச்சி அப்படியான ஒரு நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வியூஸை அதிகரிக்கச் செய்த உத்திகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படும்.

ஆபாசப் பேட்டி – youtube சேனல் நபர்கள் கைது – வரம்பு மீறலா… கருத்து சுதந்திர பறிப்பா?

ஆனாலும் இதற்கு கைது எனும் அளவுக்குச் செல்வது சரிதானா என்றும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது. அந்தத் தொகுப்பாளர் கொரோனா காலத்தில் எப்படி பொழுது போனது என்றுதான் கேட்கிறார். அந்தப் பெண்கள் சர்ச்சைக்கு உரிய கருத்துகளைச் சொல்கிறார். அதனால், youtube சேனல்காரர்களைக் கைது செய்வது சரிதானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்து சுதந்திரத்திற்கும் எல்லை மீறுவதற்கும் சிறு வித்தியாசமே உள்ளது. அதை உணர்ந்து நடந்துகொள்வதே இதற்கு தீர்வாக அமையும்.