வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

 

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

தேனி

தேனியில் வழிப்பறி வழக்கில் கைதான இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் 10 சரவன் செயினை பறித்துக்கொண்டு தப்பிசென்றனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் விவேக் என்பவரை கைதுசெய்தனர்.

நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த விவேக் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வழிப்பறி சம்பவம் தொடர்பான வழக்கு தேனி மாவட்டம் உத்தமபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அருண்குமார் குற்றவாளி விவேக்கிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கு திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் தேனி மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.