திருப்பத்தூரில் வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று உயிரிழப்பு!

 

திருப்பத்தூரில் வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று உயிரிழப்பு!

திருப்பத்தூர்,  வாகனம் பறிமுதல் ,  தீக்குளித்த இளைஞர் இன்று உயிரிழப்பு, Youth killed, vehicle confiscation in Tirupati
திருப்பத்தூரில் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் கடந்த 12ம் தேதி தீக்குளித்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பத்தூரில் வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று உயிரிழப்பு!திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கடந்த 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஓ.ஏ.ஆர் தியேட்டர் அருகே போலீசார் முழு ஊரடங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவரிடம் ஊரடங்கு காலத்தில் வெளியே வந்தது ஏன் என்று கேட்டுள்ளனர். சரியான காரணம் இன்றி அவர் வெளியே ஊர் சுற்றியதால் அவரது வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூரில் வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று உயிரிழப்பு!இதனால் மன வேதனை அடைந்த முகிலன், காவலரைக் கண்டித்து தீக்குளித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனடியாக காவல் பணியில் ஈடுபட்ட ஐந்து பேரையும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த டி.எஸ்.பி பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார். இளைஞரிடம் வாகனத்தை பறிமுதல் செய்த சந்திரசேகர் என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

திருப்பத்தூரில் வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று உயிரிழப்பு!இந்த நிலையில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகிலனுக்கு இன்று காலை உடல்நிலை மோசம் அடைந்தது. இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் சோகம் அடைந்தனர். காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.