Home க்ரைம் `வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!'- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவிலை தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் கோடீஸ்வரன் (30). பெயிண்ட்ராக வேலை செய்து வந்த இவர், நேற்று மாலையில் கோடீஸ்வரன் பாரதிநகர் மேட்டுத்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கோடீஸ்வரனுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடலையூரைச் சேர்ந்த ராக்கம்மாள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இதனிடையே, கோடீஸ்வரன், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்த மனைவி ராக்கம்மாள் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில்தான் கோடீஸ்வரன் கொலை செய்யப்பட்டதால் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்னையை அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கொலை வழக்கு தொடர்பாக பாரதி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சாஸ்திரிநகரைச் சேர்ந்த முத்துக்காளை, இலுப்பையூரணியை சேர்ந்த பால் குட்டி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் ராமகிருஷ்ணன், புதுகிராமம் சிந்தாமணி நகரில் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அங்கிருந்த வீட்டை காலி செய்துவிட்டு பாரதிநகரில் குடியேறியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூர்யா மற்றும் கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரன் இருவரும் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று ராமகிருஷ்ணனிடம் கூறியதாக தெரிகிறது. இதில் சூர்யா, ராமகிருஷ்ணன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.‌ அதன் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சூர்யா மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் ராமகிருஷ்ணன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதனிடையே, சூர்யாவுடன் தகராறில் ஈடுபட்ட கோஸ்ஸ்வரனை பழிவாங்க வேண்டும் என்று தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். நேற்று மாலை கோடீஸ்வரன் தனியாக பைக்கில் வந்துள்ளார். அப்போது அவரை ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்காளை, பால் குட்டி ஆகியோர் வழிமறித்து எப்படி ஏரியா விற்கும் வரக்கூடாது என்று நீ சொல்லலாம் என்று கோடீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ராமகிருஷ்ணன் மற்றும் அவர் நண்பர்கள, கோடீஸ்வரனை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த கோடீஸ்வரன ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தப்பியோடி 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Most Popular

‘மொழி திணிப்பை ஏற்க முடியாது’ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது...

”தொற்று அதிகம் உள்ள பகுதியா” ? – கூகுள் மேப்ஸில் தெரிந்துகொள்ளலாம்!

கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இனி கூகுள் மேப்ஸ் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

“கண்டவனோட கட்டி புடிச்சுகிட்டு போறியா” -பைக்கில் போன பெண்ணுக்கு நேர்ந்த நிலை

தன்னுடைய காதலி வேறொரு வாலிபனோடு பைக்கில் உரசியபடி போவதை பார்த்து பொறாமைப்பட்டு,அவரின் ஒரு தலை காதலன் அந்த பெண்ணை கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

‘எஸ்.பி.பியின் சிகிச்சைக்கான கட்டணம் பற்றிய வதந்தி’ வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த சரண்!

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பிபியின் மருத்துவக் கட்டணம் விரைவில் வெளியாகும் என எஸ்.பி.பியின் மகன் சரண் தெரிவித்துள்ளார். 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
Do NOT follow this link or you will be banned from the site!