பிரதமர் மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம்?…. சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ்

பிரதமர் மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம்?…. சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து 7வது ஆண்டாக இந்த ஆண்டும் தீபாவளியை பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். பிரதமருடன், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம்?…. சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ்
ராணுவ சீருடையில் பிரதமர் மோடி

ஜெய்சல்மரில் எல்லை பாதுகாப்பு படை முகாமில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ சீருடை அணிந்து வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடை அணிந்ததை காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடி எப்படி ராணுவ சீருடை அணியலாம்?…. சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ்
ராணுவ சீருடையில் பிரதமர் மோடி

இளைஞர் காங்கிரஸ் அணி டிவிட்டரில், அவர் (பிரதமர் மோடி) ராணுவ தளபதியோ அல்லது அதிகாரியோ இல்லை. ஒரு சிவிலியன் தலைவர் ராணுவ சீருடை அணிவது எப்படி பொருத்தமானது? என கேள்வி கேட்டு பதிவு செய்து இருந்தது. மேலும் அதனுடன் பிரதமர் மோடி ராணுவ ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்து இருந்தது.