• March
    29
    Sunday

Main Area

Main



5000க்கு பைக்கை அடமானம் வைத்த இளைஞர்.. தாத்தா மீட்டுத்தராததால் தீக்குளித்து தற்கொலை !

gokul
gokul

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சியில் ஆட்டுக்காரனூர் பகுதியில் வசித்து வருபவர் தங்கவேல். கயிறு திரிக்கும் கூலி தொழில் செய்து வரும் இவர், தனது பேரன் கோகுல் (20) உடன் வசித்து வருகிறார். கோகுலின் தந்தையும் தாயும் சிறு வயதிலேயே இறந்து விட்ட நிலையில், கோகுலை இவரே வளர்த்து வந்திருக்கிறார். கோகுலும் இவருடன் சேர்ந்து கயிறு திரிக்கும் வேலை செய்வாராம். 

ttn

பொதுவாக, இளைஞர்கள் என்றாலே பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும். அதே போல, கோகுலும் அவரது தாத்தாவிடம் பைக் வாங்கிக் கொடுக்கும் படி கேட்டுள்ளார். முதலில் பணமில்லை என்று மறுப்பு தெரிவித்த தங்கவேல், பிறகு பேரன் ஆசை படுகிறானே என்பதற்காக ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வாங்கி கொடுத்துள்ளார். 

ttn

அந்த பைக்கை ஆசையோடு ஓட்டிக் கொண்டு வந்த கோகுல், சமீபத்தில் ஏதோ ஒரு நெருக்கடி காரணமாக 5000 ரூபாய்க்கு பைக்கை அடமானம் வைத்துள்ளார். பிறகு, அந்த பைக்கை மீட்டு தருமாறு தங்கவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு தங்கவேல் தன்னிடம் பணமில்லை என்று கூறவே கோகுல் தங்கவேலிடம் சண்டை போட்டுள்ளார். பைக்கை மீட்டுத் தாராததால் ஆத்திரமடைந்த கோகுல், அருகே இருந்த பெட்ரோலை எடுத்து மேலே ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். 

ttn

கோகுல் தீயில் கருகிக் கொண்டே கதறியதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, கோகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.