காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே காதல் தோல்வியால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் பால்குடம் (60). இவரது இளைய மகன் நிஷாந்த் (21). கட்டிட தொழிலாளியான இவர், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக நிஷாந்த் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை நீண்ட நேரமாக அறை திறக்காததால் பெற்றோர் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, நிஷாந்த் தூக்கில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்த போலீசார், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிஷாந்த் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனர். கடிதத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், வேறு யாரும் காரணமில்லை என்றும் நிஷாந்த் தெரிவித்து உள்ளார்.