கடன் பெற்றவர்கள் திருப்பி தராததால் விவசாயி தற்கொலை…

 

கடன் பெற்றவர்கள் திருப்பி தராததால் விவசாயி தற்கொலை…

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே கடன்பெற்றவர்கள் பணத்தை திருப்பி தராத வேதனையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (35). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ராம்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு புத்துகோவில் பகுதியை சேர்ந்த நண்பர்களான சந்தோஷ், மோகன், சரவணன் ஆகியோருக்கு, ஜாமீன் கையெழுத்து போட்டு 7 லட்சம் ரூபாய் கடன் பெற்று தந்துள்ளார்.

ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி அளித்து வந்துள்ளனர். இதனை அடுத்து தனது பணத்தை கொடுத்து கடனை அடைத்த அவர், நண்பர்களிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு முறையாக பதில் அளிக்காத நண்பர்கள் ராம்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

கடன் பெற்றவர்கள் திருப்பி தராததால் விவசாயி தற்கொலை…

இதனால் கடந்த சிலநாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், புல்லூர் கிராமம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் உடலை எடுக்க இரு மாநில போலீசாரும் வர வில்லை என கூறப்படுகிறது. ஒரு நாள் கடந்தும் உடலை போலீசார் எடுக்காததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர்.