பாடி பகுதியில் கோயில் கலசங்களை திருடிய இளைஞர் கைது, மேலும் ஒருவருக்கு வலை

பாடி பகுதியில் கோயில் கலசங்களை திருடிய இளைஞர் கைது, மேலும் ஒருவருக்கு வலை

சென்னை

சென்னை பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் கலசங்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.

பாடி பகுதியில் கோயில் கலசங்களை திருடிய இளைஞர் கைது, மேலும் ஒருவருக்கு வலை

சென்னை பாடி டி.எம்.பி. நகர் சுந்தரர் தெருவில் உள்ள சிவா- விஷ்ணு கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 24ஆம் தேதி இரவு பூஜை முடிந்து நிர்வாகிகள் கோயிலை பூட்டிச்சென்ற நிலையில், மறுநாள் காலையில் திறக்க வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த குருக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலில் இருந்த 15 கோபுர கலசங்கள், பித்தளை குத்து விளக்கு, தாம்பூலத் தட்டு உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

பாடி பகுதியில் கோயில் கலசங்களை திருடிய இளைஞர் கைது, மேலும் ஒருவருக்கு வலை

இதேபோல, பாடி மாரியம்மன் கோயிலிலும் மர்மநபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக, கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் கொரட்டூர் காவல் ஆய்வாளர் பொற்கொடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோயில்களில் இருவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

பாடி பகுதியில் கோயில் கலசங்களை திருடிய இளைஞர் கைது, மேலும் ஒருவருக்கு வலை

மேலும், அதில் பதிவான உருவத்தின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், கொள்ளையர்கள் திருமுல்லைவாயல் காந்திநகரை சேர்ந்த கவுதம் (18) மற்றும் அவரது கூட்டாளி அம்பத்தூரை சேர்ந்த விஷ்வா (20) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று காலை கௌதமை கைதுசெய்தனர். மேலும், அவனிடம் இருந்து 15 கோபுர கலசங்கள், குத்துவிளக்கு, தாம்பூலத்தட்டு உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விஷ்வாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.