ராமாபுரத்தில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

 

ராமாபுரத்தில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை

ராமாபுரம் சுற்றுட்டார பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 15 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். ராமாபுரம் சாந்திநகர் கன்னியப்பன் தெருவை சேர்ந்தவர் நித்தியம் சிவகுமார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் அதே பகுதியில் நண்பர் வீட்டில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

ராமாபுரத்தில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

மறுநாள் சென்றுபார்த்தபோது, இருசக்கர வாகனம் மாயமானது. இதுகுறித்து அவர் ராயலாநகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர், தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் அயப்பாக்கத்தை சேர்ந்த குமார் என்கிற கொக்கி குமார் (24) இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குமாரை கைதுசெய்த போலீசார் அவரிடமிருந்து 15 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

ராமாபுரத்தில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் குமார் ஆவடி, ராயல் நகர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும், இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் 9 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து, குமார் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.