தாம்பத்ய உறவுக்கு மறுத்த இரண்டாவது மனைவி… மூன்றரை வயது மகளை அடித்து துன்புறுத்திய இளைஞர் கைது!

இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவியும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா (23). இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவியும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதையடுத்து சிங்கராஜாவுக்கு கம்பம் புதுப்பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இதனால் சிங்கராஜாவின் நட்பு நாளடைவில் காதலாக மாற இருவரும் மறுமணம் செய்து கொண்டு தாத்தப்பன்குளம் பகுதியில் வசித்து வந்தனர்.

பாலியல் தொல்லை

இதையடுத்து மறுமணம் செய்து கொண்ட பெண்ணை தாம்பத்ய உறவுக்கு சிங்கராஜா அழைத்துள்ளார். அந்த பெண் மறுத்ததால் அவரை அடித்து துன்புறுத்தியதுடன், அந்த பெண்ணின் மூன்றரை வயது குழந்தையையும் அடித்து துன்புறுத்தி உடலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீட்டினுள் அடைத்து வைத்து விட்டு வெளியில் சென்று விட்டார்.

representative image

இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், சிங்கராஜாவை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Most Popular

மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா; விமான விபத்தை ஆய்வு செய்த இத்தனை அதிகாரிகள் பாதிப்பா?

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது....

டீ போட மறுத்த மனைவி மீது மிளகாய் தூளை கொட்டிய கணவர் -எங்கே கொட்டினாருன்னு தெரிஞ்சா நொந்து போயிடுவீங்க .

அஹமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வசிக்கும் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டிலிருக்கும் மாமியாரால் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது .குறிப்பாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த மாமியார் அந்த மருமகளை...

“ரூ.1.25 கோடி மதிப்பிலான”..வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்கா பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதில் இருந்து இந்த போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்றே...

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...
Do NOT follow this link or you will be banned from the site!