பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!

20 வயதான இவர் அரசு உறுப்பு கல்லூரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

ஊரடங்கு காலகட்டத்தில் பல திருமணங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இளம்வயது காதலர்களுக்கு திருமணம் என்பது ஊரடங்கில் அதிகம் நடந்து வருவதாக தெரிகிறது. அதேபோல் பல குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

dainik-srijan-couple-love

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் அன்புதாசன். 20 வயதான இவர் அரசு உறுப்பு கல்லூரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனால் இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதனால் ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இது குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவர் அன்புதாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் . பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

ஒருபக்கம் கடன்காரர்களின் டார்ச்சர் மறுபக்கம் மாமியாரின் தொல்லை… கணவனின் இறப்பால் உயிரை மாய்த்த மனைவி… உயிருக்கு போராடும் மகள், மகன்கள்!

தேவகோட்டை அருகே கணவன் இறந்த நிலையில் கடனை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்ததால் வேதனை அடைந்த மனைவி, மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்தார். இதில் தாய் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் பிள்ளைகள் உயிருக்கு போராடி...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது!

இன்றைய ராசிபலன்கள் 05-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

12 மணிக்கு பூமி பூஜை..12.40-க்கு பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.. மேடையில் 5 பேர் மட்டும்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கியது. 100 கோடி இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இன்று நிஜமாக...

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்குக்கும், ஆதித்யா தாக்கரேவுக்கு தொடர்பு கிடையாது.. முட்டு கொடுக்கும் சிவ சேனா

மும்பையை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அதுல் பட்கல்லர் அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்....