கூகுள் பே-யின் போலி ஸ்கிரீன்ஷாட்: பல கடைகளில் மோசடி செய்த பலே ஆசாமி கைது!

 

கூகுள் பே-யின் போலி ஸ்கிரீன்ஷாட்: பல கடைகளில் மோசடி செய்த பலே ஆசாமி கைது!

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல தனியார் கடை ஒன்றிற்கு சென்று அங்கு செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் போன்றவற்றை ரூபாய் 50 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். அதற்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறி அவர் அந்த பணத்தை செலுத்தாமல் அதற்கான பில்லை எடிட்டிங் செய்து கடைக்காரரிடம் காண்பித்து விட்டு அங்கிருந்து சென்று உள்ளார். ஆனால் விஷ்ணு அனுப்பிய தொகை கடைக்காரரின் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை. இதுகுறித்து அந்த கடையின் வாட்ஸ்அப் குரூப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கூகுள் பே-யின் போலி ஸ்கிரீன்ஷாட்: பல கடைகளில் மோசடி செய்த பலே ஆசாமி கைது!

இதையடுத்து விஷ்ணு அதே கடையின் வேறு ஒரு கிளைக்கு சென்று இதேபோல் பொருட்களை வாங்கிவிட்டு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறி போலி ஸ்க்ரீன் ஷாட்டை காண்பித்துள்ளார். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட கடையின் ஊழியர்கள் சற்று நேரம் பொறுங்கள் வங்கிக்கணக்கில் பணம் வந்ததும் நீங்கள் செல்லலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்ணு தனக்கு நேரம் ஆவதாக கூறி ஊழியர்களிடம் சண்டை போட்டுள்ளார். அதற்குள் போலீசுக்கு தகவல் கொடுத்து அந்த இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அவர்கள் விஷ்ணுவை பிடித்து விசாரித்ததில் இவர் இதே போன்று துணி கடை , வீட்டு பொருட்கள் வாங்கும் கடை என பல இடங்களில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது இதையடுத்து விஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.