செல்பி புள்ளைங்களை தெறிக்கவிட்ட யானைகள்!

 

செல்பி புள்ளைங்களை தெறிக்கவிட்ட யானைகள்!

வனவிலங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவதும், அவற்றை சுற்றுலாப்பயணிகள் சீண்டிப்பார்த்து வாங்கிக்கட்டிக்கொள்வதும் ஊட்டியில் வழக்கமாகிவிட்டது. வனத்துறை எவ்வளவு எச்சரித்து கேட்பதே இல்லை செல்பி புள்ளைங்க.

செல்பி புள்ளைங்களை தெறிக்கவிட்ட யானைகள்!

மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் யானைக்கூட்டம் நின்றிருந்தது. அந்த வழியாக ஜீப்பில் சென்றவர்கள் அமைதியாக கடந்து போகாமல், யானைகள் துரத்து வரும்போது செல்பி எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஜீப்பின் ஆக்சிலேட்டரை மிதித்து சத்தம் எழுப்பி இருக்கிறார்கள். எரிச்சல் அடைந்த யானைகள் அவர்கள் நினைத்தது மாதிரியே துரத்த ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவர்களால் செல்பி எடுக்க முடியவில்லை. கொஞ்சம் விட்டிருந்தால் தூக்கி சுழற்றி அடித்திருக்கும் அளவுக்கு ஆவேசமாக ஓடிவந்ததும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஜீப்பின் வேகத்தை கூட்டியிருக்கிறார்கள்.

செல்பி புள்ளைங்களை தெறிக்கவிட்ட யானைகள்!

அப்படித்தான் புல் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமையை தான் செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக, கீழே குனிந்து புல் மேயும் காட்டெருமை நிமிர்ந்து பார்க்க வேண்டும், தொடர்ந்து ஒலி எழுப்ப, காண்டான காட்டெருமை துரத்துவது மாதிரி ஒரு மிரட்டல் விட்டதுமே அந்த பெண் தெறித்து ஓடிவிட்டது.

செல்பி என்கிற பெயரில் சுற்றுலாப்பயணிகள் இப்படி வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்றும், இப்படி செய்வதால் சும்மா வருபவர்களை கூட வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.