ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்காக நடந்த ஆட்கள் தேர்வு முகாம்.. நூற்றுக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்; காற்றில் பறந்த சமூக இடைவெளி!

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்காக நடந்த ஆட்கள் தேர்வு முகாம்.. நூற்றுக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்; காற்றில் பறந்த சமூக இடைவெளி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால் அந்த தொற்று நோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ள மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டும் வேலைக்கு இளைஞர்கள் தேவை என்று வெளியான அறிவிப்பை பார்த்த, வேலையில்லாத இளைஞர்கள் பலர் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்காக நடந்த ஆட்கள் தேர்வு முகாம்.. நூற்றுக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்; காற்றில் பறந்த சமூக இடைவெளி!

நாகர்கோவிலில் இருக்கும் கோட்டார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் இயக்கும் ஓட்டுநர் பணிக்கும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணிக்கும் கடந்த இரண்டு நாட்களாக ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு காலி இடங்களுக்கும் வெவ்வேறு நாட்களில் ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று ஓட்டுநர் பணிக்கான தேர்வு நடந்துள்ளது. இது தான் நல்ல வாய்ப்பு என்று கருதிய நூற்றுக் கணக்கான இளைஞர்கள் அங்கு கூடியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் அங்கு சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படவில்லையாம். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவி வரும் சூழலில், இவ்வாறு கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.