• March
    29
    Sunday

Main Area

Main



போலி கணக்கில் பெண் குரல்...சிறுமியின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய இளைஞர் கைது!

 மகேஷ்
மகேஷ்

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 16வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வந்துள்ளார்.  இவருக்கு இளைஞர் ஒருவரின் நட்பு கிடைக்க இருவரும்  ஜாலியாக பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அந்த இளைஞர் ஆபாச பேச்சுக்களை அள்ளிவிட அந்த சிறுமி பிளாக் செய்துள்ளார்.

இதையடுத்து கௌசல்யா என்ற பெயரில் போலி கணக்கின் மூலம் மீண்டும் சிறுமியுடன் பேசியுள்ளார். சிறுமியும் அவனை பெண் என்றே நம்பி, பேச்சுகளைத் தொடர்ந்திருக்கிறார். ஆர்வத்தில் அந்தரங்க விஷயங்களைப் பேசி வந்துள்ள சிறுமி,  குளியலறையில் அரைகுறை ஆடையுடன் குளிப்பது போன்ற காட்சிகளையும் அனுப்பி வைத்துள்ளார்.

ttn

தான் நினைத்ததைச் சாதித்துவிட்டதாக எண்ணிய இளைஞர், அந்தக் காட்சிகளை வைத்துக்கொண்டு சிறுமியை  மிரட்டிவந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தனது அம்மாவிடம் இதுபற்றி கூற, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மணலி புதுநகரைச் சேர்ந்த மகேஷ் என்ற அந்த நபரை கைது செய்தனர். பட்டதாரியான அவர் வேலை கிடைக்காமல் ஊசுற்றிவந்த நிலையில், இதுபோன்ற சிறுமிகளை குறிவைத்து பாலியல் ரீதியாக பிளாக்மெயில் செய்வதை முழுநேர பணியாக வைத்துள்ளார்.

ttn

இதை தொடர்ந்து மகேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.