‘காதல் ஜோடி தஞ்சமடைந்த வீட்டில் கள்ள நோட்டு’ அடைக்கலம் கொடுத்ததால் சிக்கிய இளைஞர்கள்!

‘காதல் ஜோடி தஞ்சமடைந்த வீட்டில் கள்ள நோட்டு’ அடைக்கலம் கொடுத்ததால் சிக்கிய இளைஞர்கள்!

புதுக்கோட்டை அருகே வீட்டில் ரூ.7.5 லட்சம் கள்ள நோட்டுகளை தயாரித்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காதல் ஜோடி, திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் கோவை சேரன்மாநகர் பகுதியில் இருக்கும் அவர்களது நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற போலீசார், அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது, ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கியுள்ளது.

‘காதல் ஜோடி தஞ்சமடைந்த வீட்டில் கள்ள நோட்டு’ அடைக்கலம் கொடுத்ததால் சிக்கிய இளைஞர்கள்!

அது மொத்தமாக ரூ.7.5 லட்சம் அளவுக்கு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த ரூமில் தங்கி இருந்த நாமக்கல்லை சேர்ந்த தீப்சித்(24) மற்றும் ராகவேந்திரன் ஆகிய இளைஞர்கள் தான் கள்ளநோட்டுகள் தாயரித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீப்சித் வெப் டிசைனிங் செய்து வந்ததாகவும் வருமானம் இல்லாததால் கள்ள நோட்டுகளை தயாரித்ததாகவும் கூறியுள்ளனர்.

‘காதல் ஜோடி தஞ்சமடைந்த வீட்டில் கள்ள நோட்டு’ அடைக்கலம் கொடுத்ததால் சிக்கிய இளைஞர்கள்!

மேலும், ராகவேந்திரனின் நண்பர் திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்கு தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காதல் ஜோடிகள் தங்கி இருந்த இடத்தையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். காதல் ஜோடிக்கு உதவச் சென்று கள்ள நோட்டு வழக்கில் சிக்கிக் கொண்ட இளைஞர்களின் நிலை தற்போது பரிதாபமாகியுள்ளது.