கிசான் முறைகேடு: கம்யூட்டர் சென்டர் நடத்தி வந்த நபர் கைது!

 

கிசான் முறைகேடு: கம்யூட்டர் சென்டர் நடத்தி வந்த நபர் கைது!

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த, கம்பியூட்டர் சென்டர் நடத்தி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த தகவலின் பேரில், எந்தெந்த மாவட்டங்களில் மோசடி நடைபெற்றுள்ளது என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தியதில் கள்ளகுறிச்சி, சேலம், திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. மேலும், விவசாயிகள் அல்லாதோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கிசான் முறைகேடு: கம்யூட்டர் சென்டர் நடத்தி வந்த நபர் கைது!

இதனையடுத்து முறைகேடு செய்தவர்களிடம் இருந்து பணத்தை திரும்பிப்பெறும் முயற்சியில் மாவட்ட ஆட்சியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மாவட்டங்களில் பணத்தை திருப்பி செலுத்துவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கிசான் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை கையிலெடுத்த சிபிசிஐடி போலீசார், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக கம்பியூட்டர் சென்டர் நடத்தி வந்த மணிகண்டன் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் பெயரில் போலி ஆவணம் தயாரித்துக் கொடுத்து மோசடி செய்ததால் அவர் மீது சிபிசிஐடி நடவடிக்கை எடுத்துள்ளது.