‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!

 

‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!

தமிழகத்தில் இபாஸ் நடைமுறை மக்களுக்கு பெரும் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. இதனை நீக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், அதனை இப்போதைக்கு தகர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் கூறிவிட்டார். இருப்பினும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்ட முதல்வர், இபாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளித்துள்ளதாக நேற்று அறிவித்தார். அதாவது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பிக்கும் அனைவர்களுக்கும் உடனடியாக இபாஸ் கொடுக்க வேண்டும் என்றும் செல்போன், ஆதார், ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும் என்றும் வெளிமாநில மற்றும் மாவட்டங்களுக்கு தற்போது இருக்கும் இபாஸ் நடைமுறையே தொடரும் என்றும் தெரிவித்தார். இபாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், அதனை நீக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!

இதனிடையே இபாஸ் பெற்றுத்தர பலர் பணம் வாங்கிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதில் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் ஈடுபடுவதாக கூறப்பட்டது. சமீபத்தில் வேலூரில் இபாஸ் வாங்கி தருவதாக கூறி பணம் கேட்ட இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இபாஸ் வாங்கித்தர பணம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்பதற்காகத் தான் இபாஸ் முறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.