சிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்; இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த விபரீதம்!

 

சிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்; இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த விபரீதம்!

மதுரையில் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து இளைஞர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பராக பேசி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறியுள்ளனர். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டுக்கு செல்லும் சந்தோஷ் குமார் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதற்கு ராகுல் என்னும் சந்தோஷின் நண்பர் நபர் உடந்தையாக இருந்துள்ளார்.

சிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்; இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த விபரீதம்!

ஒரு கட்டத்தில் சந்தோஷ்குமார் சிறுமியை மிரட்டுவதை தெரிந்துகொண்ட சிறுமியின் தாய் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சந்தோஷ்குமார், அவரது நண்பர் ராகுல் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.