• March
    29
    Sunday

Main Area

Main



டூ வீலரில் செல்லும் இளம் பெண்களுக்கு அபராதத்துடன் ஆபாச புகைப்படங்கள் இலவசம்!  எஸ்.ஐ.செய்த அட்டூழியம்!

மாதிரி படம்
மாதிரி படம்

புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் போக்குவரத்து காவலர்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை மடக்கிப் பிடித்து அபராதத் தொகை வசூலிக்க துவங்கினார்கள். இந்த திட்டத்தின் நோக்கமே போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறக் கூடாது என்பது தான். இது ஓரளவுக்கு கைமேல் பலன் கொடுத்து, வாகன ஓட்டிகள் தற்போது பரவலாக ஹெல்மெட் அணிந்து சென்றாலும், இந்த சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் போக்குவரத்து காவலர்களும் இருக்கிறார்கள்.

traffic

வேலூரில் கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்களுக்கும், குடும்ப பெண்களுக்கும் சமீப காலங்களாக தொடர்ந்து வாட்ஸ் அப்களில் ஆபாச தகவல்களும், ஆபாசமான புகைப்படங்களும் வந்து கொண்டிருந்தன. வீட்டில் சொல்வதற்கு பயந்து பலரும் வெளியே இது பற்றி சொல்லாமல் இருந்த போது, ஒரு பெண்மணி துணிச்சலாக அவரது கணவரிடம் இதுகுறித்து தகவலை தெரிவித்தார். ஆபாச புகைப்படம் அனுப்பிய எண் யாருடையது என்று கணவர் விசாரித்ததில்,  அந்த எண் வேலூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் எண் என தெரிய வந்துள்ளது. அவர் அனுப்பிய மெசேஜ்களை சேமித்துக் கொண்டு அந்தப் பெண்ணின் கணவர் இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னை மன்னிச்சிடுங்க. இனிமேல் அனுப்ப மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

harassment

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மேலதிகாரியிடம் புகார் தெரிவித்தார். அந்த அறிக்கையை எஸ்பியிடம் டிஎஸ்பி வழங்கிய நிலையில் ஆபாசப் படங்கள் அனுப்பிய எஸ்.ஐயை அக்டோபர் 30-ஆம் தேதி சஸ்பெண்ட் செய்துள்ளனர். இத்தனை இளம் பெண்களின் நம்பர் அவருக்கு எப்படி கிடைத்தது என விசாரித்த போது,  வாகன சோதனையின் போது பெண்களிடம் அவர்களது செல்போன் எண்களை வாங்கி நோட்டீஸ் கொடுத்துள்ளார். அந்த எண்ணிலிருந்து இரவு நேரங்களில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.