’’இளைஞர்கள் வளரக்கூடாது என்பதற்காக ஹிந்தியை எதிர்க்கிறார்கள்’’ – காயத்ரி ரகுராம்

 

’’இளைஞர்கள் வளரக்கூடாது என்பதற்காக ஹிந்தியை எதிர்க்கிறார்கள்’’ – காயத்ரி ரகுராம்

இளைஞர்கள் வளரக்கூடாது என்பதற்காக ஹிந்தியை எதிர்க்கிறார்கள் – தமிழ் கடவுள் மொழி என்றால், இந்தி நட்பு மொழி, அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் – பா.ஜ.கவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் பேட்டி

’’இளைஞர்கள் வளரக்கூடாது என்பதற்காக ஹிந்தியை எதிர்க்கிறார்கள்’’ – காயத்ரி ரகுராம்

திருச்சி பிராட்டியூரில் உள்ள தனியார் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிஜேபியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் பா.ஜ.கவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தமிழகத்தில் கண்டிப்பாக பா.ஜ.க ஆட்சி அமையும் – இனி வரும் காலங்களில் தாமரை தான் ஆட்சியில் அமரும். தமிழ் கடவுளை பெரிய அளவில் இழிவுப்படுத்தி உள்ளனர், தமிழ் மக்கள் பொறுத்து கொள்ளாமல் அதற்கு பெரிய அளவில் எதிர்பினை தெரிவித்து உள்ளனர் – இது கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜ.கவின் பக்கம் மக்கள் நிற்பார்கள்’’என்றார்.

’’இளைஞர்கள் வளரக்கூடாது என்பதற்காக ஹிந்தியை எதிர்க்கிறார்கள்’’ – காயத்ரி ரகுராம்

ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் டிரண்ட் ஆகி வருகிறதே என்பது குறித்த கேள்விக்கு,
’’இளைஞர்கள் வளரக்கூடாது என்று அப்படி செய்கின்றனர், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை இளைஞர்கள் நன்கு வளர வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கம். தமிழ் கடவுள் மொழி என்றால், இந்தி நட்பு மொழி,அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.