Home லைப்ஸ்டைல் இளைஞர்களே..‘கம்மங்கூழ்’ குடியுங்க…கட்டுமஸ்தா இருங்க..

இளைஞர்களே..‘கம்மங்கூழ்’ குடியுங்க…கட்டுமஸ்தா இருங்க..

நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன மிகப் பெரிய ஆரோக்கிய சொத்து “கம்மங்கூழ்”. நமது தாத்தா- பாட்டி காலத்தில் எல்லோர் வீட்டிலும் ‘கம்மங்கூழ்’ காய்ச்சி குடித்து வந்தார்கள்.இந்தக் காலத்து அம்மாக்களும் அப்பாக்களும் தங்கள் குழந்தைகளை பிரியாணி மற்றும் பரோட்டா பிரியர்களாக மாற்றி விட்டனர். ஏதோ..சமீப காலங்களாக தள்ளுவண்டிகளில் இந்தக் கம்மங் கூழ் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது.


தானிய வகைகளுள் ஒன்றான கம்புவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாசின், தையமின், ரிபோப்ளேவின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதோடு அத்தியாவசியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன் மற்றும் லிசித்தின், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் அடங்கியுள்ளன.கம்மங்கூழ் குடிப்பதால் நமது உடலுக்கு எண்ணற்ற நண்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இன்றைய

இளைய தலை முறையினர் கட்டாயமாக கம்மங்கூழ் குடிக்க வேண்டும். கம்மங் கூழ் குடிப்பதால் உடல் சூடு தணியும்.உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இது ரத்த செல்களை உற்பத்தி செய்யும். குடல் புற்றுநோய், பக்கவாதம் மற்றும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.கொழுப்புக்களை உடைத்தெறியும். உடல் எடையைப் பராமரிக்க உதவும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் தீவிரமான ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.முக்கியமாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.


மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் ஒரு கப் கம்மங்கூழைக் குடித்தால், மன அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம். கம்புவில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது நல்லது.

கம்மங் கூழை முதல் நாள் இரவு தயார் செய்து மறுநாள் காலையில் குடிக்க வேண்டும்.வத்தல் வகைகளை ‘சைடு டிஷ்’சாக சேர்த்துக் கொள்ளலாம் காலையில் வேறு உணவு தேவையில்லை. உடலுக்கு நல்லது செய்யும் கம்மங்கூழை வெறுக்காதீர்கள் இது பற்றிய விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
‘டாப் தமிழ் நியூஸ்’ செய்திகளுக்காக.. இர. சுபாஸ் சந்திர போஸ்.

மாவட்ட செய்திகள்

Most Popular

5 நாளில் ரூ.2.18 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்குச் சந்தை… முதலீட்டாளர்கள் குஷி…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 722 புள்ளிகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகளில்...

கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் – கமாண்டோ வீரர்கள் பங்கேற்பு!

தர்மபுரி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தீயணைப்புத்துறை சார்பில் தர்மபுரியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது!

தாடிக்கொம்பு அகர முத்தாலம்மன் கோவில் கல்வெட்டில் போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கும்...
Do NOT follow this link or you will be banned from the site!