டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு

 

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 19 வயது இளைஞர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு

இண்டூர் அடுத்த சந்தாரப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரது மகன் மணிகண்டன்(19). அவர் தனக்கு சொந்தமான டிராக்டர் மூலம் அப்பகுதியில் வாடகை பணிகளுக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இண்டூர் நோக்கி சென்றபோது நாகர்கூடல் அருகே திடீரென மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரின் கீழே சிக்கிய மணிகண்டன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து இண்டூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உடல் நசுங்கி உயிரிழப்பு