ஏடிஎம்மில் பணத்தை ஆட்டையை போட்ட பட்டதாரி இளம்பெண்: காட்டிக் கொடுத்த சிசிடிவி!

 

ஏடிஎம்மில் பணத்தை ஆட்டையை போட்ட பட்டதாரி  இளம்பெண்: காட்டிக் கொடுத்த சிசிடிவி!

தேனி அருகே ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல நடித்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தேனியில் கடந்த 25ஆம் தேதி நாகராஜ் என்பவர் பெரியகுளம் பகுதியில் இருக்கும் எஸ்பிஐ வங்கியில் பணம் செலுத்த சென்றிருக்கிறார். அங்கு கூட்டம் அதிகமாக இருக்கவே ஏடிஎம்மில் டெபாசிட் செய்து விடலாம் என்று நினைத்து ஏடிஎம்க்கு சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், தான் உதவுவதாக கூறி பணத்தை வாங்கிக்கொண்டு ஏடிஎம்மிற்குள் சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து, தான் டெபாசிட் செய்து விட்டதாகவும் ஒரு நோட்டை மட்டும் ஏடிஎம் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்மில் பணத்தை ஆட்டையை போட்ட பட்டதாரி  இளம்பெண்: காட்டிக் கொடுத்த சிசிடிவி!

இதை நம்பிய நாகராஜ் ஆதாரங்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற பின்னர், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படாததை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாகராஜ் உடனே அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், பெரியகுளம் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மின் சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில் நாகராஜுக்கு உதவுவதாக கூறிய இளம்பெண், பணத்தை டெபாசிட் செய்யாமல் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏடிஎம்மில் பணத்தை ஆட்டையை போட்ட பட்டதாரி  இளம்பெண்: காட்டிக் கொடுத்த சிசிடிவி!

அதனடிப்படையில், இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் மணிமேகலை என்றும் என்றும் இளங்கலை கணினி அறிவியல் பட்டதாரி என்றும் தெரியவந்துள்ளது. மேலும், அவர் பல இடங்களில் மோசடி செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.