‘அலைபாயுதே’ பட பாணியில் நடந்த திருமணம் : ஏமாற்றிய கணவர்; இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

அங்கிருந்தவர்கள் முத்துச்செல்வியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் தீபக். இவர் முத்துச்செல்வி என்ற 23 வயதான பெண்ணே நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே தீபக்கிற்கு வசதியான வீட்டில் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் முத்துச்செல்வியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் தீபக்.

dainik-srijan-couple-love

இதுகுறித்து முத்துசெல்வி தனது தாயாரிடம் கூறிய நிலையில் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூகநலத்துறை அலுவலகத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தீபக் முத்துச்செல்வியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் முத்துச்செல்வியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருமணம்

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார் இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!