”தனிமைப்படுத்தப்படுவீர்கள்” – ‘ஓபிஎஸ்’க்கு பா.ஜ.க அட்வைஸ்

 

”தனிமைப்படுத்தப்படுவீர்கள்” – ‘ஓபிஎஸ்’க்கு பா.ஜ.க அட்வைஸ்

அ.தி.மு.க தரப்பில் “யார் முதல்வர் வேட்பாளர்?” என்கிற சர்ச்சையில், உண்மையில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது? என்பதை உடனடியாக டெல்லி மேலிடத்திற்கு கணித்து சொல்லி விட்டது உளவுத்துறை.

”தனிமைப்படுத்தப்படுவீர்கள்” – ‘ஓபிஎஸ்’க்கு பா.ஜ.க அட்வைஸ்

கட்சி பலம், ஆட்சி பலம், பண பலம் என முதல்வர் எடப்பாடி பக்கம் வலுவாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிலரே கூட, பின்னணியில் “நாங்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்ததே வேறு ஒரு காரணத்திற்காக எனச் சிலரிடம் பேசியதை ஒட்டுக் கேட்ட உளவுத்துறையினர் இந்தத் தகவலையும் மேலிடத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

”தனிமைப்படுத்தப்படுவீர்கள்” – ‘ஓபிஎஸ்’க்கு பா.ஜ.க அட்வைஸ்

இதனையடுத்து பாஜக தரப்பில் தமிழக விவகாரங்களை கவனிக்கும் பியூஸ் கோயல் ஓபிஎஸ்சைத் தொடர்பு கொண்டு ”அதிமுக பிரச்சனை டெல்லி வரை பேசப்படுகிறது.தேர்தல் சமயத்தில் இருவரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம்.விட்டுக் கொடுங்கள், எடப்பாடியாரிடம் நான் பேசுகிறேன்.

”தனிமைப்படுத்தப்படுவீர்கள்” – ‘ஓபிஎஸ்’க்கு பா.ஜ.க அட்வைஸ்

உங்கள் பின்னால் இருப்பவர்களை நம்ப வேன்டாம். நம்பினால் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஓபிஎஸ், முரண்டு பிடிக்காமல் விட்டுக் கொடுக்க உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

– இர. போஸ்