அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் – ஸ்டாலினிடம் சொன்ன ராமதாஸ்

 

அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் – ஸ்டாலினிடம் சொன்ன ராமதாஸ்

உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தவும், ராமதாசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ஸ்டாலின்.

அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் – ஸ்டாலினிடம் சொன்ன ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாசின் 83ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ’’பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் – ஸ்டாலினிடம் சொன்ன ராமதாஸ்

இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட ராமதாஸ்,‘‘ உங்கள் தந்தை கலைஞர் என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். மருத்துவர் அய்யாவை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்’’ என்று வாழ்த்தினார்.

அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும் – ஸ்டாலினிடம் சொன்ன ராமதாஸ்

அதற்காக ராமதாசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.